/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
/
விழுப்புரத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 18, 2024 11:13 PM
விழுப்புரம், : விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை, வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை (20ம் தேதி) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனத்தினர் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., நர்சிங், பார்மஸி கல்வித் தகுதியுடையோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
இம்முகாமில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று கலெக்டர் பழனி செய்தி குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.