ADDED : மார் 05, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேஷ் வரவேற்றார்.
புதுச்சேரி இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல் லிமிடெட் மற்றும் லுாகாஸ் டி.வி.எஸ்., நிறுவனத்திலிருந்து மனித வள மேம்பாட்டு மேலாளர்கள் நேர்காணல் நடத்தி 130 பேரை தேர்வு செய்தனர்.
வேலை வாய்ப்பு அலுவலர் சரண்குமார் நன்றி கூறினர்.

