ADDED : ஆக 04, 2025 01:33 AM

விக்கிரவாண்டி காணை ஒன்றியத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியத்தில், சிறுவாக்கூர் , கல்பட்டு , மாம்பழப்பட்டு, மல்லிகைபட்டு, கோழிப்பட்டு, டட்நகர், பள்ளியந்துார், அரியலுார், கக்கனுார், துறவி தாங்கல் ,போரூர்,பூதார், வீரமூர் ,கெடார் , வாழப்பட்டு, அகரம் சித்தாமூர் , செல்லங்குப்பம் ஆகிய 17 கிராமங்களுக்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வர கூட்டு குடிநீர் திட்டம் ரூ.50 லட்சம் மதிப்பில் செயல்படுத்த திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விக்கிரவாண்டி அலுவலகத்தில் அன்னியூர் சிவா எம்.எல். ஏ., திட்ட செயல்பாடுகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சுரேஷ், ஒன்றிய பொறியாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.