/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்கன்று நடும் விழா நீதிபதி துவக்கி வைப்பு
/
மரக்கன்று நடும் விழா நீதிபதி துவக்கி வைப்பு
ADDED : மே 01, 2025 05:02 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையோரம் மரக்கன்று நடும் விழாவை, மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை திண்டிவனம் உட்கோட் டம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, வனத்துறை சார்பில், திண்டிவனம் - வந்தவாசி சாலையில், கோவிந்தாபுரம் கிராமம் அருகே நேற்று மரக்கன்று நடும் விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.
கோட்ட பொறியாளர் உத்தண்டி தலைமை தாங் கினார். வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரம் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, வனசரகர் புவனேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.