/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
/
அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 18, 2025 05:03 AM

திண்டிவனம்: திண்டிவனம் வட்ட ஐக்கிய நாடார் சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
மேல்சிவிரி கிராமத்திலுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு நாடார் சங்கத் தலைவர் பால்பாண்டியன் ரமேஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பத்மதேவி வரவேற்றார். நிர்வாகிகள் கதிரேசன், ஜெபராஜ், கணேசன், அசோக் குமார் முன்னிலை வகித்தனர். இதில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை, பாடல் உள்ளிட்ட போட்டிகளும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள் சரவணன், பாண்டியன், அருள்ராஜ், துரை, மாசாணம் முத்து, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி உதவி ஆசிரியர் பிரபு நன்றி கூறினார்.