sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கஞ்சனுார், கிளியனுார் ஒன்றியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக உதயம்

/

 கஞ்சனுார், கிளியனுார் ஒன்றியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக உதயம்

 கஞ்சனுார், கிளியனுார் ஒன்றியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக உதயம்

 கஞ்சனுார், கிளியனுார் ஒன்றியங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக உதயம்


ADDED : டிச 11, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி,காணை ஒன்றியத்திலிருந்து ஊராட்சிகளை பிரித்து கஞ்சனுார் ஊராட்சி ஒன்றியம் எனவும், வானுார் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரித்து கிளியனுார் ஊராட்சி ஒன்றியம் என இரு ஒன்றியங்களை புதியதாக அரசு அறிவித்துள்ளது. .

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா , பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்கள் தொகை அடிப்படையில் புதியதாக கஞ்சனுாரை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கும் , ஊரக உள்ளாட்சி துறைக்கும் மனு அளித்தார் .

அதன் பேரில் தமிழக அரசு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் சுகன்தீப் பேடி கடந்த 8 ம்தேதி அன்று புதிய ஒன்றியம் அமைப்பதற்கான அறிவிப்பை அரசிதழ் மூலம் வெளியிட்டார்.

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தற்பொழுது உள்ள 51 ஊராட்சிகளில் 18 ஊராட்சிகளை பிரித்தும், காணை ஊராட்சிய ஒன்றியத்தில் தற்பொழுது உள்ள 50 ஊராட்சிகளில் 19 ஊராட்சிகளை பிரித்து மொத்தம் 37 ஊராட்சிகளை உள்ளடக்கி கஞ்சனுார் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியத்தினை அறிவித்துள்ளது.

கஞ்சனுார் ஊராட்சி ஒன்றியத்தில் அன்னியூர், அனுமந்தபுரம், அத்தியூர் திருக்கை, கடையம், கல்யாணம்பூண்டி, கஞ்சனுார், கருவாட்சி, மேல்காரணை, நல்லாபாளையம், நங்காத்துார், சி.என்.பாளையம், பனமலை, பெருங்கலம்பூண்டி, போரூர், சாலவனுார், சங்கீத மங்கலம், திருக்குணம், உடையாநத்தம், வெள்ளையாம்பட்டு, பிரம்மதேசம், ஈச்சங்குப்பம், எண்ணாயிரம், எசாலம், கஸ்பாகாரணை, குண்டலபுலியூர், மண்டகப்பட்டு, முட்டத்துார், நகர், நந்திவாடி, நேமூர், பிடாரிப்பட்டு, செ.புதுார், திருநந்திபுரம், தும்பூர், வேலியேந்தல், வேம்பி, செ.குன்னத்துார் ஆகிய ஊராட்சிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

கிளியனுார் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம் வானுார் ஊராட்சி ஒன்றியத்தில் தற்பொழுதுள்ள 65 ஊராட்சிகளிலிருந்து 31 ஊராட்சிகளை பிரித்து கிளியனுார் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியத்தினை அறிவித்துள்ளது.

கிளியனுார் ஊராட்சி ஒன்றியத்தில் ஆப்பிரம்பட்டு, அருவப்பாக்கம், காரட்டை, காட்ராம்பாக்கம், காயல்மேடு, கழுப்பெரும்பாக்கம், கீழ் கூத்தப்பாக்கம், கிளாப்பாக்கம், கிளியனுார், கொடூர், கொமடிப்பட்டு, கொந்தமூர், கொஞ்சிமங்கலம், கொழுவாரி, குன்னம், மாத்துார், நல்லாவூர், நெசல், உலகாபுரம், ஒழிந்தியாம்பட்டு, பேராவூர், புதுக்குப்பம், டி.பரங்கினி, தைலாபுரம், தலகாணிக்குப்பம், தென்கோடிப்பாக்கம், தென்சிறுவளூர், தேற்குணம், உப்பு வேலுார், வி.கேணிப்பட்டு, வில்வநத்தம் ஆகிய ஊராட்சிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

பல ஆண்டு கோரிக்கைக்கு பிறகு, புதிதாக கிளியனுார் ஒன்றியம் உருவாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளதால், 35 கிலோ மீட்டரை கடந்து வந்த கிளியனுாரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து பொதுமக்களுக்கு ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு வெளியிட்ட ஆறு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக அரசு கூடுதல் தலைமை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , தலைமை செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 13 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்பொழுது புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஊராட்சி ஒன்றியங்களை சேர்த்து மொத்தம் 15 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் புதியதாக கஞ்சனுார் ஊராட்சி ஒன்றியம் அரசு அறிவித்ததற்கு தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவிற்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us