/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டலில் சாப்பிட்டவரை தாக்கி 2 சவரன் நகை பறிப்பு
/
ஓட்டலில் சாப்பிட்டவரை தாக்கி 2 சவரன் நகை பறிப்பு
ஓட்டலில் சாப்பிட்டவரை தாக்கி 2 சவரன் நகை பறிப்பு
ஓட்டலில் சாப்பிட்டவரை தாக்கி 2 சவரன் நகை பறிப்பு
ADDED : டிச 11, 2025 05:38 AM
வானுார்: கிளியனுார் அருகே ஓட்டலில் சாப்பிட்டவரை தாக்கி இரண்டு சவரன் செயினை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 42; இவர் கடந்த 8 ம் தேதி இரவு புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், மொளசூரில் உள்ள தனியார் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரது பக்கத்து டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர், ஆறுமுகத்தை பார்த்து ஏன் என்னை பார்க்கிறாய் என கேட்டுள்ளார். அதில் ஆறுமுகத்திற்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் ஆறுமுகத்தை சூழ்ந்துகொண்டு அவரை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றது.
ஆறுமுகம் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

