/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் 'ரெடி' நாளை வாகனங்களை அனுமதிக்க ஏற்பாடு
/
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் 'ரெடி' நாளை வாகனங்களை அனுமதிக்க ஏற்பாடு
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் 'ரெடி' நாளை வாகனங்களை அனுமதிக்க ஏற்பாடு
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் 'ரெடி' நாளை வாகனங்களை அனுமதிக்க ஏற்பாடு
ADDED : அக் 19, 2024 01:59 AM
விழுப்புரம்: கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில், ஒருவழிச் சாலை தயாராகி விட்டதால், நாளை (20ம் தேதி) சோதனை ஓட்டம் நடத்தி வாகனங்களை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தில், கண்டமங்கலத்தில் ரயில் பாதையின் குறுக்கே இரும்பு (பாஸ்டிங் கர்டர்) மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இருவழியாக தயாராகி வரும் இந்த இரும்பு பாலத்தை, ரயில் பாதையின் குறுக்கே நகர்த்தி வைத்து இணைப்பு பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக, புதுச்சேரி- விழுப்புரம் மார்க்கத்தில் இரும்பு பாலத்தை தயார்படுத்தி சாலையுடன் இணைக்கும் கட்டுமானப் பணி கடந்த வாரம் முடிந்தது.
இதனையடுத்து, பாலத்தின் மீது சிமென்ட் சாலை அமைக்கும் பணியும், பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கான்கிரீட் சுவர்கள் கட்டுமான பணியும் நடந்தது. நேற்று, ரயில்வே மேம்பாலத்தின் மீது இறுதிக்கட்டமாக சாலை போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகாய் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே திட்டமிட்டபடி, கண்டமங்கலம் பாலத்தின் ஒருபகுதி பணிகள் முடிக்கப்பட்டு, அதன் மீது சாலையும் போடப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில், நாளை 20ம் தேதி வாகனங்களை இயக்கி, பாலத்தின் உறுதித் தன்மைக்காக லோடு டெஸ்ட் செய்யப்படும்.
அதன் பிறகு, இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினால், உடனே (இன்று முதல்) மேம்பாலத்தில் தற்காலிகமாக வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
இதேபோல், எதிர்புறத்திலும் பாலத்தின் இணைப்பு பணிகள் நடந்து வருவதால், அந்த பணியும் ஒரு மாத காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.

