ADDED : அக் 22, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் 45 ம் ஆண்டு கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது.
முதல் நாள் விழாவாக நேற்று மாலை திருமுருகன் தோற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு
சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 2 ம் நாள் விழாவாக தந்தைக்கு உபதேசம் நிகழ்ச்சியும், நாளை 24ம் தேதி தாருகன் வதையும், 25ம் தேதி சிங்க முகன் வதையும், வீரபாகு துாதும், 26ம் தேதி வேல் வாங்குதலும், 27ம் தேதி இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹார விழாவும், 28ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடக்க உள்ளது.