/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
/
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
ADDED : அக் 22, 2025 11:09 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 700 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் கனமழை காரணமாக, நீர்வரத்து வாய்க்கால்களில் மழை நீர் வழிந்தோடி வருகிறது. மேலும், நேற்று பெய்த கனமழையால் மழை நீர் அதிகரித்து விளை நிலங்களில் சூழ்ந்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. விழுப்புரம், கண்டமங்கலம் வட்டாரங்களில் குறுவை நெல் அறுவடை நடந்து வந்த நிலையில், தொடர் மழையால் வெள்ள நீர் பாய்ந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே ஆனாங்கூர், சாலையாம்பாளையம், நன்னாட்டாம்பாளையம், கோலியனுார், வளவனுார், கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 700 ஏக்கர் அளவிலான குறுவை சாகுபடி நெற் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால், கொட்டும் மழையிலும் அவர்கள் இயந்திரம் மூலம் அறுவடை பணியில் ஈடுபட்டனர்.