/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கன்னிகாபுரம் தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு
/
கன்னிகாபுரம் தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு
கன்னிகாபுரம் தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு
கன்னிகாபுரம் தொடக்கப் பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு
ADDED : நவ 07, 2025 12:52 AM
மயிலம்: மயிலம் அடுத்த கன்னிகாபுரம் அரசு துவக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 6ம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.
மயிலம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் கடந்த 1982ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கியது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த இப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பொது மக்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்த, பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இளமதி தலைமை தாங்கினார். சேர்மன்கள் மரக்காணம் தயாளன், மயிலம் யோகேஸ்வரி, மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., குத்து விளக்கு ஏற்றி வைத்து 6ம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், ரவிச்சந்திரன், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், ஊராட்சி தலைவர் மனோகரன்.
மாவட்ட ஆதி திராவிடர் நல அணிஅமைப்பாளர் திருமலை, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், ராஜ் பரத் உட்பட பலர் பங்கேற்றனர்.

