ADDED : மார் 27, 2025 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் ஸ்ரீம் மெட்ரிக் பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் போட்டிகள் நடந்தது.
கராத்தே போட்டி நிகழ்வுக்கு பள்ளி முதல்வர் அழகப்பன் வரவேற்றார். ஷீகோ காய் கராத்தே இண்டர்நேஷ்னல் இந்தியா அமைப்பு சார்பில், கலர் பெல்ட் கராத்தே பயிற்சி போட்டி நடந்தது.
இப்போட்டியில், ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
நிறைவாக போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டர் ரென்ஷி நடராஜன் கலர் பெல்ட் வழங்கினார். பள்ளி தாளாளர் தனலட்சுமி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியர் சதீஷ் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.