/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்று கார்த்திகை தீபம் விளக்குகள் விற்பனை ஜோர்
/
இன்று கார்த்திகை தீபம் விளக்குகள் விற்பனை ஜோர்
ADDED : டிச 13, 2024 07:25 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி, பலவிதமான அகல் விளக்குகள், டெரக்கோட்டா விளக்குகள் விற்பனை நடந்தது.
கார்த்திகை தீப திருநாள் இன்று 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் பொதுமக்கள் தங்களது வீடுகள், அலுவலகங்கள், கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவர். தொடர்ந்த 3 நாட்கள் நடைபெறும் இந்த தீப விழாவில் தீபம் ஏற்றுவதற்கான விளக்குகள் விற்பனை ஜோராக நடந்தது.
சாலை அகரம், ராகவன்பேட்டை, தென்னமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விதவிதமாக அகல் விளக்குகளை தயாரித்துள்ளனர்.
இந்த முறை பன்முகங்கள் கொண்ட 5 ஸ்டார், 7 ஸ்டார் அகல் விளக்குகள், சிங்கிள் ஸ்டெப் அகல் விளக்குகள், கலச அகல் விளக்கு, தாமரைப்பூ விளக்குகள், நெய் விளக்கு, தொங்கும் அகல் விளக்குகள், யானை விளக்குகள், தட்டு விளக்குகள், தேங்காய் அகல் விளக்கு, ஸ்டாண்ட் அகல் விளக்கு, சங்கு விளக்கு, குபேர விளக்கு, ஐந்தடுக்கு விளக்கு, அன்னப்பறவை விளக்கு, மேஜிக் லேம்ப் உள்ளிட்ட பல வகைகளிலும், பல வண்ணங்களில் சுடு மண் விளக்குகள் மற்றும் டெரகோட்டா அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
விதவிதமாக விளக்குகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சுடுமண் அகல் விளக்குகள் 1 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், விதவிதமான டெரக்கோட்டா விளக்குகள் 500 வரையிலும் வரையிலும் விற்பனையானது.