/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்குவாரி கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய நபர் கைது
/
கல்குவாரி கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய நபர் கைது
கல்குவாரி கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய நபர் கைது
கல்குவாரி கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய நபர் கைது
ADDED : ஜன 19, 2025 06:49 AM

வானூர்: திருவக்கரை கல்குவாரி கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வானூர் அடுத்த திருவக்கரை கல்குவாரியில் உள்ள தண்ணீரில், கடந்த நவம்பர் மாதம் ஆண் சடலம், தலை, கை, கால்கள் இல்லாமல் வானூர் போலீசார் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்டவர் திருவெண்ணைநல்லுார் அடுத்த சரவணப்பாக்கத்தை சேர்ந்த ராஜதுரை, 32; என்பதும், முன்விரோதம் காரணமாக சரவணப்பாக்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தங்கபாண்டியன்,31; துாண்டுதலின் பேரில் ஒரு கும்பல், அவரை அடித்து கொலை செய்து, உடலை கல்குவாரியில் வீசியிருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த தங்கபாண்டியனை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரத்தில் பதுங்கியிருந்த தங்கபாண்டியனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

