ADDED : ஜூலை 04, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்க பூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் ஸ்ரீ ரங்க பூபதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்வி நிறுவன செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார் அறக்கட்டளை இயக்குநர் சாந்தி, பள்ளி இயக்குநர் சரண்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இண்டர்நேஷ்னல் பள்ளி முதல்வர் அல்தியா வரவேற்றார். டாக்டர் கவுரி பெற்றோர்களுக்கு கருத்துரையுடன், மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வகுப்புகளை துவக்கி வைத்தார்.
நிகழ்வில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் ரத்னா கணபதி நன்றி கூறினார்.
