/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பாராட்டு
/
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 30, 2024 07:46 AM

செஞ்சி செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் வழிபாட்டு குழு சார்பில் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு கடந்த 1ம் தேதி 70 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். இவர்களுக்கு செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாட்டு குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலை பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பொது மக்களை ஒழுங்குபடுத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதற்காக என்.எஸ்.எஸ்., மாணவர்களை பாராட்டி சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராஜா தேசிங்கு அரசு பள்ளியில் நடந்தது.
தலைமையாசிரியர் கணபதி தலைலை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
வழிபாட்டுக் குழு உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் சக்தி ராஜன், செல்வம், ஆசிரியர் அண்ணாதுரை, சரவணன், அனுக்குமார் வாழ்த்திப் பேசினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஆசிரியர் ஏழுமலை நன்றி கூறினார்.