/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 16, 2024 09:42 PM

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிலம்பம் விளையாட்டில் முதல் இரு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டில் முட்டத்துார் சிலம்பம் விளையாட்டு குழுவைச் சேர்ந்த பள்ளி கல்லுாரி மாணவர்கள் பிரிவில் பனையபுரம் யுவராஜ் , ஒட்டம்பட்டு தர்ஷினி, முட்டத்துார் ஐயப்பன், சுகுணேஷ் ஆகியோர் முதலாம் இடமும் ,
சிந்தாமணி சதீஷ், முட்டத்துார் புவனேஸ்வரி, நேமூர் வேலு, ஈச்சங்குப்பம் விஷ்ணு, பிடாரிப்பட்டு அஸ்வினி, அரசலாபுரம் சந்தியா ஆகியோர் இரண்டாம் இடமும் பெற்றனர்.
அவர்களுக்கு சிலம்பம் விளையாட்டு குழு சார்பில் பயிற்சியாளர் சுரேந்தர், கிராம பொதுமக்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.