/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குயிலை கல்விக்கூட மாணவர் கள் கராத்தே போட்டியில் சாதனை
/
குயிலை கல்விக்கூட மாணவர் கள் கராத்தே போட்டியில் சாதனை
குயிலை கல்விக்கூட மாணவர் கள் கராத்தே போட்டியில் சாதனை
குயிலை கல்விக்கூட மாணவர் கள் கராத்தே போட்டியில் சாதனை
ADDED : ஆக 06, 2025 11:20 PM

வானுார்:புதுச்சேரியில் ஷிட்டோ ஸ்கூல் நேஷனல் அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குயிலை கல்விக்கூட மாணவ, மாணவியர் பரிசு பெற்றனர்.
புதுச்சேரியில் ஷிட்டோ ஸ்கூல் நேஷனல் அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல்வேறு கராத்தே பள்ளி மற்றும் கராத்தே அமைப்புக்களை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் ஆரோவில் குயிலை கல்விக்கூட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் குயிலை கல்விக்கூட அணி மாணவ, மாணவியர்கள் பரிசுகளை பெற்றனர்.
அவர்களுக்கு சென்சாய்கள் சத்தியசீலன், லெனின், ஹரி, தீனதயாளன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் குயிலை கல்விக் கூட நிறுவனர் ராம்குமார் , கஜேந்திரன் மற்றும் ஆசிரியர் வள்ளி ஆகியோர் உடன் இருந்தனர்.