/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 21, 2024 12:29 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுவந்தாடு கிராமத்திலுள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவை யொட்டி, நேற்று காலை 6.30 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, புண்யாஹம், மகா பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடைபெற்றது.
பின், 9.00 மணியிலிருந்து 10.15 மணிக்குள், விமான கும்பாபிஷேகம், கருவறை மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கஸ்துாரிரங்கன் பட்டாச்சார் சுவாமி நடத்தி வைத்தார்.
தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் திருவிழா, கோதண்டராமர் திரு வீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், லட்சுமணன் எம்.எல்.ஏ., பக்தர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பத்ரி பட்டாச்சாரியார் மற்றும் சிறுவந்தாடு கிராம பொதுமக்கள் செய்தனர்.

