/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
/
லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 04, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:  விழுப்புரம் அடுத்த கருங்காலிப்பட்டு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலை இரண்டு கால பூஜை, கோ பூஜை, விஸ்வரூபம், நித்திய ஹோமம், தம்பதி பூஜை நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்படாகி,  9:45 மணிக்கு மூலவர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

