/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா
/
பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 28, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி. சாத்தனுாரில் பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி 10:10 மணியளவில் கோவில் கலசத்திற்கு பனையபுரம் கணேசன் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
வி. சாத்தனுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

