/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
/
ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : நவ 28, 2025 05:16 AM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக்ராம் நேகி ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் விழுப்புரம், புதுச்சேரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உட்பட 75 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
விழுப்புரம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் 23.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை, நேற்று காலை 9:30 மணிக்கு திருச்சியில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையம் முதல் பிளாட்பாரத்திற்கு தனி ஆய்வு ரயில் மூலம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக்ராம் நேகி ஆய்வு செய்தார்.
ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் தற்போதுள்ள நிலைகள், இங்கு புதிதாக உருவாக்கப்படும் 7 வது பிளாட்பாரத்திற்கான பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை துரிதமாக முடித்து, பயணிகள் இடையூறின்றி ரயில் பயணம் மேற்கொள்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என, அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து 11:10 மணிக்கு புறப்பட்டு சென்றார்.
ஆய்வின் போது, முதுநிலை கோட்ட மெக்கனிக்கல் பிரிவு பொறியாளர் கிளமண்ட் பர்னபாஸ், முதுநிலை கோட்ட மின் பொறியாளர் பிரசாத் சிராயில், முதுநிலை சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பிரிவு பொறியாளர் இரப்பாபிர்குல், விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர் மராண்டி, போக்குவரத்து ஆய்வாளர் பிரவீன்குமார் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

