/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் சரகத்தில் 45 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்' டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தகவல்
/
விழுப்புரம் சரகத்தில் 45 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்' டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தகவல்
விழுப்புரம் சரகத்தில் 45 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்' டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தகவல்
விழுப்புரம் சரகத்தில் 45 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்' டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தகவல்
ADDED : டிச 22, 2024 07:12 AM

விழுப்புரம் : விழுப்புரம் சரக காவல்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தலைமையில், 'சட்டம்- ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு மற்றும் தடை செய்யப்பட்ட மதுபானத்தை ஒழிப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் ஆகியவற்றை தடுப்பது மற்றும் காவல்துறையினரின் நலன் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில், விழுப்புரம் சரகத்தில் 2024ம் ஆண்டில், இதுவரை 718 கஞ்சா வியாபாரிகள் மீது வழக்கு பதிந்து, 456 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து ஆயிரத்து 101 சோதனைகள் நடத்தி, 1429 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில், 630 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 58 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு மட்டும், ரவுடிகளின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, ஆயிரத்து 335 நபர்களுக்கு ஜாமின் பத்திரம் பெறப்பட்டுள்ளது. 45 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப் பட்டது.
நேற்று நடந்த குறை தீர்க்கும் முகாமில், 170 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். குற்றங்களைக் கண்டறிதல் மற்றும் சட்ட அமலாக்கத்தில் முன்மாதிரியாக செயல்பட்ட 45 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை பாராட்டி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சான்றிதழ் வழங்கினார்.