ADDED : அக் 28, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே கூலித்தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன் மனைவி தனலட்சுமி, 45; கூலித்தொழிலாளி.
குடிப்பழக்கம் உள்ள கணவருக்கும், தனலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த தனலட்சுமி நேற்று முன்தினம் மாலை பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யில் தனலட்சுமி இறந்தார்.
அவரது மகன் குமார் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.