/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை; ஊரக வேலையை ஒத்தி வைக்க வலியுறுத்தல்
/
விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை; ஊரக வேலையை ஒத்தி வைக்க வலியுறுத்தல்
விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை; ஊரக வேலையை ஒத்தி வைக்க வலியுறுத்தல்
விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை; ஊரக வேலையை ஒத்தி வைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 12, 2024 08:23 PM

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், சம்பா பருவ விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் தலைமையில், நேற்று கலெக்டரை சந்தித்து மனு அளித்து கூறியதாவது: தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு (2023-24) அறிவித்த ஊக்கத் தொகை, சிறப்பு ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இந்த ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.215 வீதம், ரூ.215 கோடி தர வேண்டியுள்ளது. கூட்டுறவு ஆலைகளில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தனியார் ஆலைகள் வழங்காமல் உள்ளனர். அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக சம்பா பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், நாற்று நடுவதற்கும், விவசாய பணிகளுக்கும் ஆட்கள் பற்றாக்குறை தொடர்ந்துள்ளது. இதனால், சம்பா பருவம் முடியும் இரண்டு மாதகாலத்திற்கு, மாவட்டம் முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை தள்ளி வைக்க வேண்டும். விவசாய பணிகளுக்கு ஆட்கள் வருவதை உறுதிசெய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு தேசிய ஊரக வேலை திட்டத்தை, சில மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டுமென்று, விவசாயிகள் தெரிவித்தனர்.

