/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திட்டங்களுக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது லட்சுமணன் எம்.எல்.ஏ., வேதனை
/
திட்டங்களுக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது லட்சுமணன் எம்.எல்.ஏ., வேதனை
திட்டங்களுக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது லட்சுமணன் எம்.எல்.ஏ., வேதனை
திட்டங்களுக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது லட்சுமணன் எம்.எல்.ஏ., வேதனை
ADDED : மார் 31, 2025 06:14 AM
விழுப்புரம் : 'முதல்வர் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளார்' என மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறினார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நேற்று கோலியனுார் மேற்கு ஒன்றியம், கொண்டங்கி ஊராட்சியில் நடந்த விழாவிற்கு, தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு நாம் செலுத்தும் ஜி.எஸ்.டி., வரியை நமக்கு தராமலும், கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை வழங்காமலும் குறிப்பாக நுாறு நாள் திட்டத்திற்கு தர வேண்டிய 4,000 கோடி ரூபாயை தராமல் நம்மை வஞ்சிக்கின்றனர்.
இது கிராமப்புற பெண்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள் பழங்குடியினர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்றும் சொல்லலாம்.
முதல்வர் ஸ்டாலின் நிதி பிரச்னை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. அதேபோல் தொகுதி மறு சீரமைப்பால் எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறையும். இதனால் நமது கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்படும். இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இரு மொழிக் கொள்கை. முதல்வர் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளார்.
இவ்வாறு லட்சுமணன் எம்.எல்.ஏ., கூறினார்.
ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் கேசவன், அரிராமன், ஒன்றிய பொருளாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த், தண்டபாணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம், பட்டு ஆறுமுகம், ஞானவேல், நன்னாடு சுரேஷ், கிளை நிர்வாகிகள் சிவக்குமார், அன்பழகன், கிருஷ்ண மூர்த்தி, வெங்கட், ராமலிங்கம் கண்டம்பாக்கம் ஊராட்சி தலைவர் தனசேகரன், மரகதபுரம் தேவிரமேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.