/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலம் தொடர்பான கோரிக்கைகள் ஜன. 3ம் தேதி சிறப்பு குறைகேட்பு
/
நிலம் தொடர்பான கோரிக்கைகள் ஜன. 3ம் தேதி சிறப்பு குறைகேட்பு
நிலம் தொடர்பான கோரிக்கைகள் ஜன. 3ம் தேதி சிறப்பு குறைகேட்பு
நிலம் தொடர்பான கோரிக்கைகள் ஜன. 3ம் தேதி சிறப்பு குறைகேட்பு
ADDED : டிச 27, 2024 11:22 PM
விழுப்புரம்,; விழுப்புரம் மாவட்டத்தில், நிலம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து, 3ம் தேதி சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.
கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத் தில், வாரந்தோறும் திங்கட் கிழமை  பொதுமக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில், பொதுமக்களிடமிருந்து, நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் அதிகளவில் வரப்பெறுகிறது.
இதையடுத்து, மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில், நிலம் தொடர்பான குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 3ம் தேதி காலை 10:30 மணியளவில், நடைபெற உள்ள சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மனைப்பட்டா, ஒப்படை, இலவச வீட்டுமனைப்பட்டா, ஆக்கிரமிப்பு, நிலஅபகரிப்பு மற்றும் நிலம் கையகம் தொடர்பான மனுக்களை  பொதுமக்கள் நேரிடையாக வழங்கி பயன்பெறலாம்.