/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணை ஒன்றிய அலுவலக கட்டடம்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
/
காணை ஒன்றிய அலுவலக கட்டடம்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
காணை ஒன்றிய அலுவலக கட்டடம்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
காணை ஒன்றிய அலுவலக கட்டடம்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ADDED : நவ 12, 2024 08:19 PM

விழுப்புரம்; காணை ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பிரசிங் மூலம், ரூ.3.66 கோடி மதிப்பிலான காணை ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, காணை அலுவலகத்தில், கலெக்டர் பழனி குத்துவிளக்கு ஏற்றினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் அன்னியூர் சிவா, டாக்டர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், சீனுவாசன் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, துணை சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார்,முன்னாள் சேர்மன்கள் கல்பட்டு ராஜா, விழுப்புரம் ஜனகராஜ், கல்விக்குழு உறுப்பினர் முருகன், ஊராட்சித் தலைவர் கமலநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகப்பன், ஜோதி, பாரதி, சுப்ரமணி, பாரதி, சரவணன், கலாவதி, சரசு, வள்ளி கிருஷ்ணமூர்த்தி, கருணாகரன், சேட்டு, தனகோட்டி, சவுபாக்கியம், ஏழுமலை, கண்ணகி ராமநாதன், ஜெயமாலினி, தேவபூஷணம், ஜெயா, குபேந்திரன், பர்குணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.