/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'இ -- பைலிங்' திட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்
/
'இ -- பைலிங்' திட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்
'இ -- பைலிங்' திட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்
'இ -- பைலிங்' திட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்
ADDED : நவ 28, 2025 11:33 PM

விழுப்புரம்: தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில், வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் 'இ-பைலிங்' என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் வரும் 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கு, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர், 'இ-பைலிங்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே நடந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால், திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்கறிஞர் சங்கத்தினர் கூறுகையில், 'அனைத்து நீதிமன்றங்களிலும், இ-பைலிங் செய்வதற்கான அதிவேக இணைய வசதி, கம்ப்யூட்டர், மின்னணு சாதன வசதிகளை ஏற்படுத்தும் வரை, இந்த அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து, தற்போதைய நடைமுறை தொடர வேண்டும்' என்றனர்.

