ADDED : ஏப் 25, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் கோர்ட் எதிரில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத கவர்னருக்கு, ஒப்புதல் அளிக்க கால நிர்ணய உத்தரவு வழங்கியது.
வக்ப் திருத்த சட்டத்திற்கு தடையாணை பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக குடியரசு துணை தலைவர் கருத்து தெரிவித்ததற்கும் கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம் தலைமை தாங்கினார்.
அமைப்பின் மாநில குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்து, வழக்கறிஞர்கள் அரசாங்கு, சேகர், பூபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

