ADDED : ஆக 02, 2025 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : கோவை வழக்கறிஞர் முருகானந்தம் கொலையை கண்டித்து விக்கிரவாண்டியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், கோவை வழக்கறிஞர் முருகனந்தம் கொலையை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.
சங்க செயலாளர் முருகன், பொருளாளர் ராஜபாண்டியன், துணை தலைவர் பிரகாஷ், வழக்கறிஞர்கள் கார்த்திக், எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.