ADDED : நவ 22, 2025 04:46 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 8, 9 தேதிகளில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் 80 ஏரிகளில் மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு:
விழுப்புரம் தாலுகாவில் 7 ஏரிகள், விக்கிரவாண்டி தாலுகாவில் 14, திண்டிவனம் தாலுகாவில் 15, திரு வெண்ணெய்நல்லுார் தாலுகாவில், 18, செஞ்சி தாலுகாவில் 2, கண்டாச்சிபுரம் தாலுகாவில் 9, மரக்காணம் தாலுகாவில் 2, வானுார் தாலுகாவில் 12 உட்பட 80 ஏரிகளில் மீன் பாசி குத்தகைக்கு வி டப்பட உள்ளது.
www.tntenders.gov.in என்ற இணையளத்தில் மின்னணு ஒப்பந்தப் புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட உள்ளது.
இது பற்றி கூடுதல் விபரங்கள் பெற நெ.62/56ஏ, தாட்கோ வளாகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், விழுப்புரம் 605602, fishermen welfarevpm@gmail.com மற்றும் 04146 259329 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

