/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்
/
தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்
ADDED : அக் 31, 2025 02:42 AM

விழுப்புரம்:  விழுப்புரம் அருகே முன்விரோத  தகராறில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் ராமகிருஷ்ணன்,28;  கடலுார் மாவட்டம், மணமேடு, மலைய பெருமாள் அகரம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் விவேக்,33; இருவரும் விழுப்புரம் அருகே அகரம்பாட்டையில் தனியார் குடோனில் 2017 ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்தனர்.
இந்நிலையில், விவேக்கை ராமகிருஷ்ணன் கிண்டல் செய்ததால் தகராறு ஏற்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு ஆக., 18 ம் தேதி,  குடோனுக்கு அருகிலிருந்த ராமகிருஷ்ணனை, விவேக் சுத்தியால் தாக்கினார். பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விழுப்புரம் டவுன் போலீசார வழக்கு பதிந்து விவேக்கை கைது செய்தனர். வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில், குற்றம் சாற்றப்பட்ட விவேக்கிற்கு, ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி தீர்ப்பளித்தார்.

