/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செவிலியர் கல்லுாரியில் தீபமேற்றி உறுதிமொழி
/
செவிலியர் கல்லுாரியில் தீபமேற்றி உறுதிமொழி
ADDED : டிச 17, 2025 06:58 AM

விழுப்புரம்: மயிலம் செவிலியர் கல்லுாரியில் மாணவர்கள் தீபமேற்றி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
மயிலம் செவிலியர் கல்லுாரி மற்றும் துணை செவிலியர் மருத்துவ பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவாக்கிய உறுதிமொழியை முதலாம் ஆண்டு மாணவர்கள் தீபமேற்றி உறுதிமொழி எடுத்தனர்.
நிகழ்ச்சிக்கு, மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். இயக்குனர் செந்தில் வாழ்த்தி பேசினார்.
சிதம்பரம் நர்சிங் கல்லுாரி முதல்வர் சுதா, விழுப்புரம் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை தரம் எண் 2 செவிலியர் கண்காணிப்பாளர் சிவகாமசுந்தரி, மயிலம் ஆரம்ப சுகாதார நிலை செவிலியர் அலுவலர் சரண்யா சிறப்புரையாற்றினர்.
விழாவில், மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன், மயிலம் கல்விக்குழுமம் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். விரிவுரையாளர் நிலா நன்றி கூறினார்.

