/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் நோக்கு நிலை நிகழ்ச்சி
/
மகளிர் கல்லுாரியில் நோக்கு நிலை நிகழ்ச்சி
ADDED : டிச 17, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் , 'நிதித் துறையில் தொழில் வாழ்க்கையை பாதிக்கும் வளர்ந்து வரும் போக்குகள்' தலைப்பில் நோக்கு நிலை நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் கலைமதி தலைமை தாங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழில் முனைவோரின் பங்கு பற்றி கூறினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சசிகுமார் வரவற்றார்.
சென்னை, பின்ஸ்பையர் அகாடமி இயக்குநர் குமார், 'யு.எஸ்., - சி.எம்.ஏ., சான்றிதழ் மூலம் உலகளாவிய வாழ்க்கையை உருவாக்குதல்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். உ தவி பேராசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

