ADDED : டிச 19, 2024 06:59 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஹோஸ்ட் லயன் சங்கம் சார்பில், அன்னை மரகதம் லயன்ஸ் சங்க துவக்க விழா மற்றும் சேவைப்பணி நடந்தது.
ஏ.எஸ்.ஜி., மண்டபத்தில் நடந்த விழாவிற்கு லயன்ஸ் சங்க தலைவர் ராஜா தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆளுநர் சுபாஷ்சந்திரபோஸ், துணை ஆளுநர் ராஜாசுப்ரமணியம், கனகதாரன், முன்னாள் ஆளுநர் சரவணன் ஆகியோர், புதிய சங்கத்தை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினர்.
நிர்வாகிகள் செல்வகாந்தி, ராஜன், தணிகாசலம், அசோக்குமார், விஜயலட்சுமி, கீதா, முரளிதரன், நடராஜன், ஏ.எஸ்.ஜி., கோபி, தனபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அன்னை மரகதம் சங்க புதிய நிர்வாகிகளாக சாசன தலைவர் ராஜசிகாமணி, தலைவர் சண்முகம், செயலாளர்கள் சிவக்குமார், குமார், பொருளாளர் ராமச்சந்திரன், துணை தலைவர்கள் பழனி, காந்தி உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.