ADDED : டிச 22, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப்- இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஆனத்துார் பஸ் நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன், 40; என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.