ADDED : அக் 03, 2025 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; மது பாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூ. கள்ளக்குறிச்சி கிராமத்தில் மது பாட்டில் விற்பதாக திருநாவலுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜி, 41; என்பவரை கைது செய்தனர்.