ADDED : அக் 03, 2025 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூரில் ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சிக் கூடல் அமைப்பு சார்பில் மழை வேண்டி வர்ண பூஜை நடந்தது
மலட்டாட்றில் நடந்த நிகழ்ச்சிக்க, அமைப்பு தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். நேற்று 2ம் தேதி காலை 11:00 மணியளவில் வேத விற்பனர்கள் கணபதி பூஜையோடு ஹோமங்களை துவக்கினர்.
தொடர்ந்து லட்சுமி ஹோமம், 108 மூலிகை ஹோமம், பூர்ணாஹூதி செய்யப்பட்டு, மழை வேண்டி வருண பூஜை நடந்தது. பின் ேஹமத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் ஆற்றில் ஊற்றப்பட்டு மலர்தூவி வருண பகவான் வழிபாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.