/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது
/
மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது
ADDED : மார் 24, 2025 04:40 AM

வானுார்: புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீசார் மயிலம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் 65 புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித், 31; மும்முனி கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேலன், 38; என்பதும், லிங்காரெட்டிபாளையத்தில் இருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.