/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' விழுப்புரத்தில் வழிகாட்டி மையம்
/
'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' விழுப்புரத்தில் வழிகாட்டி மையம்
'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' விழுப்புரத்தில் வழிகாட்டி மையம்
'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' விழுப்புரத்தில் வழிகாட்டி மையம்
ADDED : பிப் 01, 2024 11:44 PM
விழுப்புரம்: கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதல், ஆலோசனை வழங்கிட, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தனி மையம் செயல்பட்டு வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதியுடன் செயல்படும் இத்திட்டம், ஊரக நிறுவனங்களை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடனும் துவங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக காணை, கோலியனுார், விக்கிரவாண்டி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக திருவெண்ணெய்நல்லுார், வல்லம் ஆகிய ஒன்றியங்களிலும், தமிழக ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற சுயஉதவிக் குழுவினர் மூலம் நெல், காய்கறிகள், பூக்கள், கரும்பு, வேர்கடலை, கொய்யாப்பழம் சாகுபடி செய்வதுடன், உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், உரிய வழிகாட்டுதல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, மதி சிறகுகள் என தொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு, தொழில் மேம்பாட்டு உறுதுணை சேவைகளை வழங்குகிறது.
இதுபோன்று ஓரிடத்தில் அணுகி பெறும் தீர்வுகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் புதிதாக வரும் தொழில்முனைவோர்களுக்கு நுழைவுத் தடைகள் மற்றும் இடையூறுகளைக் கடக்க உதவுகிறது.
இந்த மதி சிறகுகள் தொழில் மையம், ஊரக தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோருக்கு, தொழில் வளர்ச்சி உறுதுணை சேவைகளை வழங்குகிறது.
தொழில் திட்டத்தைத் தயாரித்து, மதிப்பீடு செய்தல். தொழிலைத் துவங்கிட, நேரடியாக வழிநடத்துதல். தேவைப்படும் நிதியுதவி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களை அணுகிப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
சட்டதிட்டங்களுக்கு இணங்கி செயல்படுதல், விற்பனைச் சந்தை அறிவு, தகவல் மற்றும் இணைப்புகள். கண்காணித்தல், வழிகாட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து விதமான வழிகாட்டுதல், ஆலோசனை வழங்கிட, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தனி மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும் விபரங்களை அறிய, கலெக்டர் அலுவலக கட்டடத்தில், இரண்டாவது தளத்தில் உள்ள மதி சிறகுகள், தொழில் மைய அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

