/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பு
/
வேளாண் பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பு
ADDED : மார் 15, 2025 08:38 PM

வானுார்; திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், வேளாண் நிதிநிலை அறிக்கையை, விவசாயிகளுக்கு 'டிவி' மூலம் ஒளிபரப்பப்பட்டது.
தமிழக சட்டசபையில் அடுத்த ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். வேளாண், தோட்டக்கலை துறை, விதைச்சான்று மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை போன்ற துறைகளில் எதிர்வரும் ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையொட்டி, பட்ஜெட்டை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நேரடியாக பார்க்க 'டிவி' மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ் ஒளிபரப்பப்பட்டது. வட்டார அளவில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பார்த்தனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் பஞ்சநாதன், ரேகா, ஜெயலட்சுமி மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்திரசேகர் செய்திருந்தனர்.