/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கல் திட்டம் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்
/
மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கல் திட்டம் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கல் திட்டம் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கல் திட்டம் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 19, 2025 11:51 PM
விழுப்புரம் : கால்நடை வளர்ப்போர் மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
கால்நடை வளர்ப்போருக்கு முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டிற்கான விழுப்புரம் மாவட்டத்திற்கு திருவெண்ணைநல்லுார் மற்றும் மேல்மலையனுார் ஒன்றியங்களில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகள் 200 பயனாளிகளுக்கு (சினையுற்ற கறவைப்பசு) 13 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரு ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பயனாளிகள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். எஸ்.சி., 29 சதவீதம் மற்றும் எஸ்.டி., 1 சதவீதம் இருக்க வேண்டும். விதவைகள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒரு பயனாளிக்கான மொத்த தொகையான 13 ஆயிரம் ரூபாயில் 50 சதவீதம், பயனாளி பங்களிப்பு தொகை 6,500 ரூபாய் செலுத்தும் பட்சத்தில் தகுதியுடையவர் ஆவர். பயனாளிகளின் கறவை பசு கட்டாயமாக சினையுற்று இருக்க வேண்டும்.
எனவே, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்குச் சென்று விண்ணப்பங்கள் பெற்று முழுமையாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தில் உதவி டாக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.