UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 04:55 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் எதிரில், டி.என்.சி.எஸ்.சி., சுமை துாக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். இதில், சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். கடந்த ஜூலை 12ம் தேதி முதல் நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் பெருமாள், ராமலிங்கம், சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
