/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காணை ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவி நியமனம்
/
காணை ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவி நியமனம்
ADDED : நவ 10, 2025 04:02 AM

விழுப்புரம்: காணை ஒன்றியத்தில், உள்ளாட்சி அமைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
காணை ஒன்றியத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
காணை பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கி, 50 மாற்றுத் திறனாளிகளுக்கு கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான உத்தரவு மற்றும் ஒரு மாற்றுத் திறனாளிக்கு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான உத்தரவை வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது, பி.டி.ஓ.,க்கள் சிவநேசன், ஜூலியானா, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

