/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியில்லாத கிரஷர் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க லாரி சங்கத்தினர் மனு
/
அனுமதியில்லாத கிரஷர் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க லாரி சங்கத்தினர் மனு
அனுமதியில்லாத கிரஷர் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க லாரி சங்கத்தினர் மனு
அனுமதியில்லாத கிரஷர் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க லாரி சங்கத்தினர் மனு
ADDED : மார் 22, 2025 03:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி நடக்கும் கிரஷர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:
விழுப்புரம் மாவட்டத்தில் கனிம வளத்துறையின் கீழ் நடக்கும் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தி செய்ய பிரதான தேவையான கருங்கல் சக்கைகள் மற்றும் போல்டர்ஸ் என அனைத்திலும் முறைகேடு நடக்கிறது.
இந்த துறையில் நடக்கும் ஊழலைத் தடுக்க உடனே ஆன்லைன் முறை மற்றும் கணினி மயமாக மாற்றினால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை பெருக்கி பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
இந்த திட்டத்தை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிரஷர், கல்குவாரிகளில் இ-வே பில் நடைமுறையை அமல்படுத்திட வேண்டும்.
இங்கு எவ்வித அரசு அனுமதி பெறாமல் 200 கிரஷர் நிறுவனங்கள் இயங்குகிறது. அனுமதியின்றி இயங்கும் கிரஷர் நிறுவனங்களில் இருந்து பல ஆயிரம் லோடு கனிமங்களை அரைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
அனுமதியின்றி நடக்கும் கனிம உற்பத்தி நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். தவறினால் கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து லாரி உரிமையாளரை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.