ADDED : மே 03, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : அனுமதியின்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் வி.ஏ.ஓ., நகர் அருகே, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சரவணன், 30; வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தார்.
புகாரின்பேரில், லாரி உரிமையாளர் விக்கிரவாண்டி அடுத்த தர்மாபுரி பார்த்திபன் மற்றும் டிரைவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.