/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைபாஸ் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
/
பைபாஸ் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : மே 11, 2025 01:27 AM

விழுப்புரம்: விழுப்புரம் பைபாஸ் சாலையில், ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த சாலாமேடு மெயின்ரோடு சக்திவேல், 42; லாரி டிரைவர், நேற்று தனது லாரியில், திருவக்கரையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி வந்தார். லாரி நேற்று காலை 9.30 மணிக்கு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் பைபாஸ் சாலையில் சென்றது.
திருவாமாத்தூர் சாலை சந்திப்பில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்தது. வாகனம் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டிரைவர் சக்திவேல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் டிரைவரை மீட்டு, வாகனங்களை எதிர் சாலையில் திருப்பிவிட்டனர்.
சாலையில் கவிழ்ந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் அப்புறப்படுத்தி சாலையில் சிதறிய ஜல்லி கற்கலையும் அப்புறப்படுத்தினர்.
இதனால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.