ADDED : செப் 23, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் மா.கம்யூ., கட்சியின் கிளை மாநாடு நடந்தது.
பகுதிக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்றார். கட்சிக் கொடியை காந்திராஜ் ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
வேலை அறிக்கையை பகுதி செயலாளர் ராமதாஸ் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரன் வாழ்த்திப் பேசினார்.
கூட்டத்தில் திண்டிவனம் வட்ட செயலாளராக கண்ணதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்கு உறுப்பினர் அறிவழகன் நிறைவுரையாற்றினார்.
கூட்டத்தில் திண்டிவனம் சிப்காட்டில் திண்டிவனம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.