/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மா.கம்யூ., மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
/
மா.கம்யூ., மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
ADDED : ஜூன் 20, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை ஒன்றிய மா.கம்யூ., கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது.
காணையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ராஜிவ்காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், சிவராமன் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் பேசினர்.
நிர்வாகிகள் தேவநாதன், முதலிவீரன், ராமமூர்த்தி, கிருஷ்ணராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.